முதல் பக்கம் VALOOTHOOR.COM எங்களுக்கு எழுத
கோபம், பொறாமை, தற்பெருமை.... .... மனிதனின் எதிரிகள்.

னித வாழ்வின் மிக முக்கியமானது நேர்மையாகும். நேர்மையும் நீதமும் வாழ்வின் முக்கிய அம்சங்களாகும். நேர்மையுள்ளவர்கள் பாவங்கள், பொய்யுரைகள், தகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்களாக உள்ளார்கள்.

முஸ்லிமான ஒருவர், பிற சகோதரனுக்கு அநியாயம் செய்யக்கூட விரும்ப மாட்டார். அநியாயம் செய்ய விரும்பினால் அவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக இருக்க இயலாது. தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு எவ்வித தீங்கும் செய்யாதவனே சிறந்த முஸ்லீமாவான்.

பி பெருமானார்(ஸல்) அவர்கள் வழியில் நட்ப்பவர்கள் எல்லோருடனும் இணக்காமாகவும் நேசமாகவும் வாழ்வதற்கு கற்றவர்களாக இருக்க வேண்டும்.

பி பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் நின்றி, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்

வுதுல் அஃலம்(ரலி) அவர்கள் சிறிய வயதில் கள்ளர் கூட்டத்தில் சிக்கியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளை மறக்காமல் உண்மையை சொன்னதால் வெற்றி அடைந்தார்கள். ஓர் உண்மை எத்தனை பேருக்கு ஈமானை, இறை நம்பிக்கையை அளித்தது என்பதனை உற்றுணர்ந்து பாருங்கள். உண்மையை சொல்ல வெட்கப்பட்டால் நீங்கள் அக்காரியஙகளை செய்ய மாட்டீர்கள். எனவே உண்மையைப் பேசுங்கள், எப்பொழுதும் பொய் பேச மாட்டேன் என்பதனை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு செயலை செய்யுமுன் அதில் மிகவும் சிநதனை செலுத்த வேண்டும். அதனை உடனே செய்துவிடக் கூடாது. மெல்ல மெல்ல செய்ய வேண்டும். சீக்கிரமே செய்யவேண்டியிருப்பின் நீங்கள் அதனை சிந்தித்த வண்ணமே செய்ய வேண்டும். ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உங்கள் மூளையை வீணாக்கிவிடாதீர்கள். சிந்தனைக்கும் அளவுண்டு.சிந்தனை உங்களை மீறி விட்டால் அது உங்களையே மீறி விடும். அப்பொழுது உங்களின் உலகம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டுவிடும். நரம்புத்தளர்ச்சி ஏற்படும். கடைசிவரை உஙகளை அது வாட்டும். அச்சம் உண்டாகும். பித்து பிடிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இதுவும் ஒரு சிறந்த வழியாகி விடும்.

கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியன ஒரு மனிதனுக்கு எதிரிகள். இவை அவனை அழித்து விடும். கோபம், பொறாமை, தற்பெருமை இவைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிலருடனேயே இவை பிறந்து இரத்தத்தில் ஊறிவிட்டமையால் அவர்களை விட்டுப்பிரிந்து செல்வதில்லை.

ரசூல்(ஸல்) அவர்கள் எல்லாம் அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எல்லாவகைச் செல்வங்களும் அவுர்கள் காலடியில் இருந்தும் தற்பெருமையோ அகங்காரமோ இல்லாமல் மிகவும் அடக்கமாகவே இருந்தார்கள். எனவே மனிதர்கள் தற்பெருமை, ஆணவம் இன்றி இருத்தல் வேண்டும். ரசூல்(ஸல்) அவர்களை உயிரினும் மேலாக கருத வேண்டும். அவர்களின் பாதையை பினபற்ற வேண்டும். அவர்கள் சொல்லிச் சென்ற முறையை கடைபிடிக்க வேண்டும்.

-அஷ்ஷெய்கு ஜமாலியா சையது கலீல் அவ்ன் மெளலானா அவர்கள்