|
பிறப்பிற்கும்-
இறப்பிற்கும்
இடைப்பட்ட
மனித வாழ்க்கை
அதி
அற்புதமானது.
அதை சிறப்பாக
அமைத்துக்கொண்டு,
இந்த
உலகத்தில்
ஒவ்வொரு
மனிதரும்
நிம்மதியாய்
வாழ இயற்கை
உருவாகி
இருக்கிறது.
இந்த உலகமே
ஐம்பூதங்கள்
என்ற
இயற்கையால்
ஆனது.
உலகின் ஆதார
சக்தியான
சூரியன்
நெருப்புக்
கோளமானது.
இதன் ஒரு
பகுதி
குளிர்ந்து,
சாம்பலாக
உதிர்ந்து
மண்ணாக மாறி
நிலமானது.
இந்த மண்ணை
குலுக்கிவிட்ட
போது காற்று
உருவானது.
காற்று
கருமேகங்களாகி
மழையானது.
அந்த மழை கீழே
கொட்டியதும்,
செடி, கொடி,
மரம்,
உயிரினங்கள்...
எல்லாம்
உருவானது!
இதுதான் உலகம்!!
அதுபோல்
நெருப்பு, மண்,
காற்று, நீர்
ஆகாயம் போன்ற
அம்சங்களின்
உருவாக்கமே
மனித உடல்
என்று
இந்தியாவின்
சித்த
மருத்துவமும்,
சினாவின்
அக்குபஞ்சர்
மருத் துவமும்
உணர்த்துகின்றன.
உலகத்தின்
உருவாக்கமாகிய
ஐம்பூதங்களில்
முரண்பாடு
ஏற்பட்டுவிடக்
கூடாது.
தண்ணீர்
அதிகமானால்
மண்ணை
அரித்துக்கொண்டு
போய்விடும்.
ஆனால் தண்ணீரே
இல்லா
விட்டால் பூமி
வறண்டுவிடும்.
காற்று
அதிகமாகிவிடும்போது
மரங்கள்
சாய்ந்துவிடும்.
காற்றே
இல்லாவிட்டால்
மரங்கள்
வளராது.
நெருப்பு
எரிய காற்று
தேவை. ஆனால்
காற்று மிக
அதிகமாக
இருந்தால்,
நெருப்பால்
எரிய முடியாது.
ஒன்றுக்கொன்று
சமச்சீர்
இல்லாமல்
போனால், இய
ற்கையின்
இயக்கத்தில்
ஏற்றத்தாழ்வு
ஏற்பட்டு
அழிவு
தோன்றிவிடும்.
கொடைக்கானலுக்கு
போனாலும்
கோவில்பட்டிக்கு
போனாலும் ஒரே
இயற்கைதான்.
சில இடங்க
ளில் செடிகள்
மட்டம்
இருக்கின் றன.
சில இடங்களில்
பூக்களும்
கிடக்கின்றன.
தண்ணீர் ஒரு
இடத்தில்
இருக்கும்.
இன்னொரு
இடத்தில்
இருக்காது மண்
எழு ம்பி
மலையாக
நிற்கும்.
சில இட
ங்களில் மண்
மட்டுமே
இருக்கும்.
இயற்கைதான்
எல்லா
இடத்திலும்
மண், மரம்,
நீர் எல்லாம்
அதே தான்.
சில இடங்களில்
இயற்கையை நாம்
அழகு என்போம்.
சில இடங்களில்
அதையே
அழகற்றது
என்போம்.
ஆனால் எல்லாம்
இயற்கைதான்.
அதுபோல்
மனிதர்களும்
படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லோருக்கும்
அதே கண், காது,
மூக்கு, வாய்....!
ஆனால் அதிலும்
அழகற்றவர்
அழகானவர்
என்று
பிரித்துவிடுகிறோம்.
பணமுள்ளவன்,
பணமில்லாதவன்,
பலமானவன்,
பலகினமானவன்
என்றெல்லாம்
சிந்தித்து
சிந்தித்து
மனிதனை மனிதனே
பிரிக்கின்றான்.
மனிதன்
சிந்திக்க
வேண்டும்.
சிந்தனை தான்
வாழ்க்கை.
அனால் அதிகம்
சிந்திக்கும்
போது அவன் அடை
யாளம்
தெரியாத
கவலைகளுக்கு
ஆட்பட்டுவிடுகிறான்.
மனிதனின்
வாழ்க்கைத்
தரும்
உயர்ந்து
விட்டதாகக்
கூறிக்கொண்டி
ருக்கிறோம்
அதனால் தனி
மனிதனுக்கு
என்ன
கிடைத்தது
என்று
ஆராய்ந்தால்,
நோய்கள்
அதிகரிப்பும்,
நிம்மதி
இழப்பும்தான்
பதிலாக
அணிவகுத்து
வருகின்றன.
நீங்கள்
நிம்மதியாக
இல்லாவிட்டால்
பிறர்
உங்களால்
நிம்மதி அடை
யவே முடியாது.
அப்படி
நீங்கள்
மற்றவர்களுக்கு
நிம்மதி
வழங்கப்
போவதுபோல்
செயல்பட்டுக்
கொண்டிருந்தால்,
உங்களையே
நீங்கள்
ஏமாற்றி
உங்களைச்
சார்ந்தவர்கள்
நிம்மதியை
கெடுத்துக்
கொண்டிருக்கிaர்கள்
என்பதுதான்
நிஜமாக
இருக்கும்.
மனிதன்
இயற்கையோடு
வாழ்ந்த
வாழ்க்கையை
மறந்து இயற்கை
யைத் தேடி
வெகு தூரம்
செல்ல
வேண்டிய
செயற்கை
நிலைக்கு
சென்றுவிட்டான்.
இயற்கைக்கும்
அவனுக்கும்
பெரிய இடைவெளி
விழுந்துவிட்டது.
ஆனால் இந்த
இடைவெளி
இயற்கை தரும்
உணவிற்கும்,
உடலுக்கும்
இல்லை.
நீங்கள்
அய்யப்பன்
கோவில்
அரவணையை
சுவைக் கலாம்.
தெருக்கடை
பாயசத்தையும்
ருசிக்கலாம்.
அரவணை என்றால்,
கண்களில்
ஒற்றி
வாய்க்குள்
இட்டுக்கொள்வீர்கள்.
தெருக்கடை
பாயசத்தை
செருப்பூக்காலோடு
நின்று,
அப்படியே
வாயில்
ஊற்றிக்
கொள்வீர்கள்.
வெளிநாட்டில்
இருந்து
விமானத்தில்
பறந்த வந்த
சொக்லேட்
என்றால்
அதையும்
பிரித்து
சாப்பிட்டு
விடுவீர்கள்.
* கோவிலில்
இருந்து
கிடைத்தது
*
தெருக்கடையில்
வாங்கியது
*
விமானத்தில்
வந்தது
எங்கிருந்து
வந்தது
என்பதில்
இருக்கும்
வித்தியாசம்
அதை வாங்கி,
வாய்க்குள்
போடும்
வரைதான்.
உடலுக்குள்
செல்கிறது.
உடல் அதில்
எந்த
பாரபட்சமும்
காட்டுவதில்லை.
வந்தது
சர்க்கரை,
நெய்,
கோதுமைப்பால்,
ஏலக்காய்,
எல்லாவற்றையும்
அது
அதற்குரிய
முறையில்
பிரிக்கிறது.
தன் ஜீரண
வேலையைத்
தொடங்கி
விடுகிறது.
அது போல் ஒரு
மனிதன்
எவ்வளவு
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்,
பதவியில்
இருக்கிறவனா,
பாதை ஓரத்தில்
படுகிறவனா
என்பதெல்லாம்
அவன் இறந்து,
அவன் உடலை
தகன
மேடைக்குக்
கொண்டு சென்று
தீயிடுவது
வரைதான்.
அருகருகில்
உள்ள
தளங்களில் ஒரு
ஏழை உடலும்,
இன்னொரு
பிரமுகர்
உடலும்
வைக்கப்படுகிறது.
ஏழைக்கு
வறட்டி
அமுக்கப்
படுகிறது.
பிரமுகருக்கு
சந்த னக்கட்டை
அடுக்கப்படுகிறது.
வறட்டியா,
சந்தனக்
கட்டையா என்ற
பேதம் தீக்கு
இல்லை. அது
பாட்டுக்கு
கொழுந்துவிடத்
தொடங்கி
எரித்து
சாம்பலாக்கி
விடுகிறது.
மனிதனாகப்
பிறந்தவன்
எதையாவது
ஒன்றை
சாதித்துவிட்டுத்தான்
இறக்க
வேண்டும்
என்பார்கள்.
சாதிக்கத்
தெரியாதவர்கள்.
பிறக்க
வேண்டியதில்லை
என்றும் யார்
யாரோ
சொல்லிவிட்டும்
போயி
ருக்கிறார்கள்.
ஆனால் இந்த
சாதனை என்பது
காலத்திற்கு
காலம்,
மனிதனுக்கு
மனிதன்
மாறுபடுகிறது.
ஒரு காலத்து
சாதனை.
குறிப்பிட்ட
காலத்திற்குப்
பிறகு
வேதனையாகவும்
மாறி
விடுகிறது.
இந்த
உலகத்தில்
பிறந்த
ஒவ்வொரு
மனிதனும்
ஏதாவது ஒரு
விஷய த்தை
மற்றவர்களுக்கு
உணர்த்தி
விட்டுத்தான்
மரணிக்கிறான்.
நல்லவன்
என்றில்லை.
கெட்டவன் கூட
அப்படி வாழக்
கூடாது என
உணர்த்துகிறான்.
பல நேரங்களில்
அதை அறிந்து
உணர்ந்து
கொள்ளும்
பக்குவம்
மற்றவர்களுக்கு
இல்லை. அதனால்
ஒவ்வொரு
மனிதனும் ஒரு
பாடம்தான்.
ஒவ்வொரு
மரணமும் ஒரு
பாடம்தான்.
கிராமங்களில்
இயற்கையோடு
கலந்த மரண
நம்பிக்கைகள்
இப்போதும்
நிறைய இருந்து
கொண்டி
ருக்கின்றன.
அதில் ஒன்று,
அமாவாசை, இது
மாதம் ஒரு
முறை
வந்துவிட்டுப்
போகிறது.
உடல் நிலை
சரியில்லாமல்
அதிக நாட்கள்
இழுத்துக்
கொண்டிருப்பவர்கள்
மீது அமாவாசை
அன்று அத்தனை
பேர் கவனமும்
திரும்பும்.
'எப்படியும்
இன்று
இரவுக்குள்
போய்விடுவார்'
என்பார்கள்.
இது அமாவாசை
கணக்கு. இதோடு
கிரக நிலை
யையும்
இணைக்கிறார்கள்.
ஜோதிடம்
வாயிலாக....!
மனிதனுக்கு
சுவாசம்தான்
உயிர்.
சுவாசத்திற்கு
அதிபதியாக
கணிக்கப்படுகிறவன்,
சந்திரன்.
அமாவாசை அன்று
சந்திரன் தன்
பலத்தை
முழுமையாக
இழப்பதாகவும்,
அதனால் மனித
உடல்
பலகீனமாகி
விடுவதாகவும்
சொல்கிறார்கள்.
ஏற்கனவே
பலகினமாக
இருக்கும்
உடல், மேலும்
பலகீனமாகி
மனிதன் இறப்பை
சந்திக்கின்றான்
என்பது
நம்பிக்கை.
ஆனால் பல அமா
வாசைகளைப்
பார்த்தும்,
இப் போதும்
இழுத்துக்
கொண்டி
ருப்பவர்கள்
பலர் உண்டு.
நோயால்
பாதிக்கப்பட்டவர்கள்
அமாவாசை அன்று
அதிக அவஸ்தையை
சந்திப்பதாகவும்,
சொல்லப்படுவதுண்டு.
அன்று கடலில்
அதிகமான அலை
இருப்பதையும்
சுட்டிக்காட்டி
இயற்கையிலும்,
இயற்கையால்
உருவான
மனிதனின் உடல்
மனதிலும்
மாற்றங்கள்
ஏற்படுவதை
குறிப்பிடுகிறார்கள்.
மரண பயத்தை
போக்க
திபெத்தியர்கள்,
மிக
அற்புதமான வழி
ஒன்றை
கடைப்பிடிக்கிறார்கள்.
ஒருவர் மரண
சூழலை அடையும்
போது அவரை மத
குருமார்கள்
சுற்றி
அமர்ந்து
கொண்டு அவர்
பிறந்த காரணம்,
அவர் செய்த
செயல்கள்,
அவர் வாழ்ந்த
வாழ்க்கையின்
சிறப்புகள்
எல்லாவற்றையும்
எடுத்துச்
சொல்லி, அவர்
அடுத்து
செல்ல
வேண்டிய
இயற்கை நிலை
மரணம் என்பதை
எடுத்துக்
கூறி, அதன்
உன்னத்தை
அவருக்கு
புரிய
வைக்கிறார்கள்.
மனோரீதியாக
அவரை
பக்குவப்படுத்தி
மரணத்தின்
மீது
அவர்களுக்கு
ஈர்ப்பை
உருவாக்கிவிடுகிறார்கள்.
மரணத்திற்கு
பிந்தைய சில
சடங்குகளை
பார்க்கும்
போது வேடிக்
கையாகவும்,
வினோதமாகவும்
இருக்கும்.
ஆனால் அதை
உள்ளார்ந்து
பார்க்கும்
போது அங்கே
தான்
தர்மங்கள்
நிறைந்த
மனிதாபிமானம்
நிலைத்து
நிற்பதைக்
காண முடிகிறது.
சடலத்தை
எரிக்கும்
போது அதன் ஆடை
எரிந்துவிடுவதால்
சடலத்திற்கு
வெட்க
உணர்ச்சி
எற்படுவதாகக்
கூறி , அதை
ஈடுசெய்ய 'பத்து
நாட்களுக்குத்
தேவையான
ஆடைகளை
தட்சனையுடன்,
நெய், எள்,
உளுந்து
காய்கறி
போன்ற உணவும்
பொருட்களோடு
சேர்த்து
தானம் செய்ய
வேண்டும்
என்ற கருத்தை
வலியுறுத்தி
வைத்திருக்கிறார்கள்.
இறந்தவருக்குச்
செய்யும்
சடங்கின்
பெயரால்
இல்லாதவர்களுக்க
உடையும்.
உணவுப்
பொருட்களும்
கிடைக்கின்றன.
இறந்து
போனவரின்
ஆன்மா
வெயிலில்
நடக்கும் போது
(?) கால்கள்
சுடாமல்
இருக்க
வேண்டுமானால்
செருப்பு
தானம் வழங்க
வேண்டும்
என்பதும்,
இறந்தவர்
ஆற்றைக்
கடக்க வாலை
பிடித்துச்
செல்ல பசுவை
தானமாக வழங்க
வேண்டும்
என்றும் அவர்
தங்க இடம்
இன்றி
தவிர்க்கக்
கூடாது
என்பதற்காக
பூமி தானம்
செய்ய
வேண்டும்
என்றும் சில
நியதிகளை
எழுதி
வைத்திருக்கிறார்கள்.
காரணம் சரியோ,
தப்போ ஆனால்
காரியம் தானம்
என்கிற நல்ல
விஷயத்தை
வலியுறுத்துகிறது.
ஏழைகளும்,
இல்லாதவர்களும்
இதனால்
பயனடைகிறார்கள்.
மனிதன் வாழும்
காலத்தில்
பெருமளவு
பொருளீட்டுகிறான்.
அத்தனை
சம்பாத்தியத்தையும்
தன்
வாரிசுகளுக்காக
நிலமாகவும்,
பொருளாகவும்,
பணமாகவும்
விட்டுவிட்டு
ஆறடி
நிலத்தினுள்
அடங்கிப்
போய்விடுகின்றான்.
"அப்பா
சம்பாதித்த
பொருட்களில்
சிறிதை
அடுத்தவர்களுக்கு
தான தர்மமாக
வழங்குங்கள்"
என்று
சொன்னால்,
யாரும் அதை
செய்ய
மாட்டார்கள்.
அதற்கு ஒரு
காரணத்தைக்
கற்பித்தால்
மட்டுமே தான
தர்மங்கள்
செய்வார்கள்
என்பதை
உணர்ந்து
ஆன்றோர்கள்,
இறந்தவர்ளின்
ஆத்மா
துன்பப்படாமல்
செல்ல
வேண்டும்
என்றால்
இன்னின்ன
தானங்களை
செய்ய
வேண்டும்
என்று எழுதி
வைத்துவிட்டுப்
போயிருக்கிறார்கள்.
இதன் மூலம்
மனித மரணம்
சோகத்திற்குரியதல்ல
தானத்திற்குரியது
என்று
வகைப்படுத்துகிறார்கள்.
நீங்கள்
வாழ்க்கையில்
தினமும்
எத்தனையோ
மனிதர்களை
சந்திக்
கிaர்கள்.
ஒருசிலரைப்
பார்த்ததும்
அவர்கள்
அப்படியே
உங்கள் மனதில்
ஒட்டிக்கொள்வார்கள்.
அவர்களிடம்
ஆழ்ந்த நட்பு
கொள்ள
விரும்புவீர்கள்.
அவருக்காக
உயிரைக் கூட
கொடுக்க தயாரா
குவீர்கள்.
அதே நேரத்தில்
இன்னும் சிலர்
உங்கள்
தேவையறிந்து
உதவ
முன்வந்தாலும்
"நன்றி! ஆனால்
இந்த உதவி
எனக்கு
இப்போது
தேவையில்லை"
என்று
தவிர்த்துவிடுவீர்கள்.
இப்படி
நீங்கள் ஒரு
மனிதரை
அளவுக்கு மீறி
நேசிப்பதற்கும்,
இன்னொரு
மனிதரை வலுக்
கட்டாயமாக
தவிர்ப்பதற்கும்
என்ன காரணம்?
இப்போது
நீங்கள் ஒரே
வீட்டில் தாய்,
தந்தை,
சகோதரன்,
சகோதரி, கணவன்-
மனைவி குழந்தை
என்று
குடும்பமாக
வாழ்கிaர்கள்.
அவர்கள்
ஒவ்வொருவரையும்
நீங்கள்
விரும்பியா
தேர்தெடுத்தீர்கள்?
இல்லையே!
அப்படியானால்
நீங்கள்
அனைவரும் ஒரே
குடும்ப
வட்டத்திற்குள்
எப்படி
இணைந்தீர்கள்,
என்பது
உணரப்படுமிடத்து
சகல
வினாக்களுக்குமான
பதில்களை
தெளிவுப்படுத்தப்படும்.
|