முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

விழிப்புடன் இருந்து வெற்றி பெறுங்கள்

வேலைக்கு போவதா அல்லது சொந்தத் தொழில் செய்வதா? சிலருடைய மனத்தில் இந்தக் கேள்வி, கரையை மோதும் கடலலைகள் போல, தொடர்ந்து கொணடேயிருக்கும். ஒரு சிலர், சீக்கிரமே இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்து, செய்ய வேண்டியதைச் செய்து, இனி இது தான் என்று செட்டிலாகிவிடுவார்கள்.

 

ஆனால், ஒரு சிலர் ஒன்றைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்படித் தொடங்கிய பிறகும்கூட, 'வேலையா, சொந்தத் தொழிலா?' என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாமலே இருப்பார்கள்.

 

800 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, பின்பு வேறு பல வேலைகளையும் சோதித்து பார்த்துவிட்டு, கடைசியில் அதை எல்லாம் உதறிவிட்டு நண்பர்களோடு இணைந்து சொந்தத் தொழிலில் இறங்கி, இன்று இந்தியத் தொழிலதிபர்கள் பட்டியலில் டாப் ரேங்கில் இருக்கிறார். தன்னம்பிக்கையோடு அவர் எடுத்த ஒரு முடிவுதான் அவரை ஜெயிக்க வைத்தது. அவரைப் போலவே, டாக்டர் ரெட்டிஸ் லேப் அதிபர் ஆஞ்சி ரெட்டியும் ஹைதராபாத்தின் மருந்து நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பிரிவில் வேலை செய்து மாதச் சம்பளத்தில் காலம் தள்ளியவர்தான் ஒரு திடீர் நம்பிக்கை. வெளியே வந்தார். இன்று மருத்துவத் துறையில் இவரது ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உலக அளவில் பெரிய மரியாதை.

 

எல்லாரும் அந்த அளவுக்கு உயர்ந்துவிட வாய்ப்பு இருந்தாலும் சிறிய அளவில் ஜெயித்தாலும் அதுவும் ஒரு விஷயம்தானே! வாசுதேவன் இநத வகையைச் சேர்ந்தவர். படிப்பு முடிந்து, சென்னை குருநானக் கல்லூரியில் 'காமர்ஸ்' சொல்லிக் கொடுக்கும் பேராசிரியராகச் சேர்ந்தார். வர்ழ்ககையில் பிரச்னகள் இன்றி சுகமாக ஓடிக் கொண்டிருந்தாலும் மனதில் அந்தக் கேள்வியும் விடாமல் கூடவே ஓடி வந்து கொணடிருந்தது.

 

இனி வாழ்க்கை முழுவதுமே வேலைதானா? ஏன் நாமே சொந்தமாக ஒரு தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடாது? கல்லூரிப் பேராசிரியராக இருந்த பத்து வருஷமும், மனசுக்குள்ளே பட்டுப்போகாமல் செழித்து வளர்ந்து கொணடிருந்த கேள்விச் செடிக்கு 1992-ல் விடை கண்டார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில், 300 சதுர அடியில் ஒரு சின்ன கடை போட்டார். கேரளாவிலும் கோவையிலும் சிலர் செய்துகொண்டிருந்ததைப் போல உருளை, நேந்திரம் பழ சிப்ஸ் பொரித்து விற்றார். சிப்ஸ் மட்டுமே!

 

இளைஞர்கள், மாணவர்களிடையே நல்ல வரவேற்பு. வியாபாரம் செழிக்க, 1994ல் பேராசிரியர் வேலையை தைரியமாக ராஜினாமா செய்தார். மடமடவென்று கிளைகள் தொடங்கினார்.

 

பெங்களூரில் கிளை தொடங்கச் சென்றபோது, அங்கே நுகர்வோர் சங்கத் தலைவர் பிரபாகரை தற்செயலாகச் சந்தித்தார். பிரபாகர் வாசுதேவனைப் பாராட்டியது மட்டுமல்லாமல், பெங்களூரில் சிறப்பாக வியாபாரம் வேறு சில கடைகளுக்கும் அன்போடு அழைத்துச் சென்று காட்டினார். அது. வாசுதேவன் வளர்ச்சிக்கு, சின்னப் பாதையாக இல்லாமல் ஒரு ஹைவேயாகவே தென்பட்டது.

 

ஒரு கடையில்,  சூப் மட்டுமே தயாரித்து விற்றார்கள். ஒரு கப் விலை வெறும் 2 ரூபாய்தான். இதில் என்ன பெரிதாக லாபம் கிடைத்துவிடும் என்ற நினைக்கலாம். ஆனால் அதுவே நாள் ஒன்றுக்கு 3000 முதல் 4000 சூப்கள் விற்பனையாவதைப் பார்த்த வாசுதேவன் மனத்தில் ஒரு சிந்தனை. அட, இதைப் போலவே நாமும் சென்னையில் செய்ய முடியுமே!

 

பிரபாகரன் அடுத்து, அதே போல வேறு ஒரு கடைக்கு வாசுதேவனைக் கூட்டிப் போனார். அந்தக் கடையும் அது 'கான்செப்ட்'டில் தான் இயங்கியது. விற்பனையான பொருள் மட்டும் வேறு. கண்ணாடிக் கோப்பைகளில் பழரசம். விலை 5 ரூபாய்! அதுவும் பிய்த்துக் கொண்டு விற்றதை,வாசுதேவன் கண்கொட்டாமல் பார்த்தார். வாசுதேவன் மனத்தில் மெள்ள மெள்ள ஒரு வியாபார திட்டம் உருவானது.

 

சென்னை வந்தார். பாரி முனையில் ஒரு கடை. எதை விற்கலாம்? அவர் தேர்ந்தெடுத்தது சூப்போ பழரசமோ அல்ல. வாசுதேவன் அங்கேதான் வித்தியாசப்பட்டார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் 'திங்க் குளோபல் ஆக்ட் லோக்கல்' என்பார்கள். தன் ஊருக்கு ஏற்றார் போல ஐடியாவை மாற்றினார்.

 

அவர் முழு வீச்சில் இறங்கியது, காபி விற்பனையில்! என்னது காபியா? இதில் என்ன பெரிய அதிசயம்? எத்தனையோ பேர் செய்வதுதானே! இதைப் போய் எப்படி ஆயிரக்கணக்கில் விற்பது? 'குறைந்த விலை, எக்கச்சக்க எண்ணிக்கை! -  இதுதான் வாசுதேவனின் திட்டம்.

 

விற்க முடியும் என்று செய்து காட்டினார். ஆயிரம், இரண்டாயிரம் அல்ல, ஒவ்வெரரு நாளும் இருப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வியாபாரம், ஒரே இடத்தில்! காபி மட்டுமே இத்தனை ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்தது.

 

சாதாரணம் என்பது எதுவுமேயில்லை. புகழ் பெற்ற விஸ்வேஸ்ரய்யா, 'நான் எதைச் செய்தாலும், எவரைக் காட்டிலும் இவர் செய்ததுதான் பெஸ்ட்! என்று பேசும்படி இருக்கும். இது கழப்பறை கழுவுவதாக இருந்தாலும் கூட!' என்று சொன்னது போல, தான் எடுப்பது, செய்வது எல்லாவற்றையும் அற்புதமாகவே செய்கிறார்கள் சிலர்.

 

வாசுதேவனும் அப்படிப்பட்டவர்தான். கூட்டம் அதிகம் கூடுமிடங்களில் வியாபாரம் செய்ய தனித் திறமையும் அணுகுமுறையும் தேவை! அப்படிப்பட்ட இடங்களில் உள்ள கடைகளுக்குத் திரும்பத் திரும்ப வரக்கூடிய ரெகுலர் கஸ்டமர்கள் பொதுவாக இருக்க மாட்டார்கள். புதிது புதிதாக வரும் 'ஃபுளோட்டிங் கஸ்டமர்கள்'தான் அதிகம்.

 

நாம் கொடுக்கும் பொருள் கஸ்டமர்களும் நினைவு கொள்ளும்படி, தேடி வரும்படி இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் கிடைக்கும் காபி போல, தன் காபி இருக்கக் கூடாது. அதே சமயம் அது மிகப் பிரமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக எப்போதும் ஒரே தரத்துடனும் ஒரே சுவை, மணத்துடனும் இருக்க வேணடும் என்ற ஸ்டாண்டர்டைசேசனில் உறுதியாக இருந்தார் வாசுதேவன்.

 

சுத்தமான பால், பெங்களூரிலிருந்து தினம் அரைத்து கொண்டு வரப்படும் 'கோத்தாஸ்' காபித்தூள், டிக்காஷன் கலக்குதல், பால் காய்ச்சுதல் போன்றவற்றில் சுவையான வழிமுறை, பயிற்சி பெற்ற தேர்ந்த ஊழியர்கள், காபியைக் கொடுப்பதற்கு 'டிஸ்போசபில் பேப்பர் கப்'கள், துரித வினியோகத்துக்கு டோக்கன் முறை, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுமிடங்களில் கடைகள். இதுதான் அடிப்படை ஃபார்முலா.

 

பாரீஸ் கார்னரில் உள்ள அவரது ஹாட் சிப்ஸ் கடையில் மட்டும், மூவாயிரம் முதல் நான்காயிரம் காபிகள் வரை நாளொன்றுக்கு சர்வ சாதாரணமாக விற்கிறது. இது தவிர பத்து இடங்களில் கிளைகள், வருஷத்துக்க பதினைந்து கோடி ரூபாய் டர்ன் ஓவர். எல்லாம் ஆரம்பித்த 12 வருஷங்களில் இவருக்கு சாத்தியாகி இருக்கிறது.

 

பணம் பண்ணவும், வியாபாரம் வெற்றிக்கும் ஜெயித்த ஒவ்வொருவரிடமும் ஏதாவது காரணங்கள் இருக்கும். சிப்ஸில் தொடங்கி சக்கை போடு போட்டவர், பின்பு கொலஸ்ட்ரால் போல சில பிரச்னைகள் உணரப்பட, 'ஒன் ப்ராடக்ட் கம்பெனி'யாக இருந்த ஹாட் சிப்ஸை வேறு சில புராடக்ட்களும் விற்கும் நிறுவனமாக மாற்றினார். பாவ்பாஜி, பேல்பூரி போல, சாட் அயிட்டங்கள், இட்லி, தோசை என எல்லாம் கிடைக்கிறது! 'தொடர் மெறுகேற்றம்' என்றார்கள். ஆச்சு, இனி அது பாட்டுக்கு ஓடும்!' என்று எதைத்தான் விட முடியும்? காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவா இருந்த இடத்திலேயே இருப்பதற்கு வேகமாக ஓட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் குப்புறத் தள்ளிவிட்டு, நம்மைப் பின்தங்க வைத்து விடுவார்கள். போட்டி அப்படி.

 

காதுகளைத் தரையில் வைத்து வியாபார நிலத்தில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைக் கூட உடனடியாக அறிந்து கொண்டு, அதற்கேற்றார்போல வியாபாரத்திலும் மாற்றங்கள் செய்வார்கள். வெற்றியைத் தவிர வேறெதனைப் பார்ப்பார்கள்? வாசுதேவன் அந்த ரகம். நீங்களும் வாசுதேவனாக மாறுங்கள்.

 

நன்றி : மனோசக்தி.

உங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப