முதல் பக்கம் VALOOTHOOR.COM எங்களுக்கு எழுத

உம்மத்தினருக்கு பெற்று தந்த பரிசு

பெருமானார்(ஸல்)  அவர்களின் விண்ணுலகப் பயணம்

(எம்.ஜே.முஹம்மது இக்பால் பி.இ., எம்.பி.ஏ.,)

யிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் புனித ரஜப் மாதத்தில் ஒரு நாள் இரவில் தங்களின் ஒன்று விட்ட சகோதரி உம்முஹானி பின்த் அபூதாலிப் (ரலி) அவர்கள் வீட்டில் இருந்தபோது இறைவனுடைய உத்தரவுப்படி ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்து சென்றார்கள். அங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாமாக இருந்து தொழுகை நடத்திவிட்டு பிறகு மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து ஏழு வானஙகள், ஸிதரத்துல் முந்தஹா, அர்ஷ், குர்ஷ் இவைகளைக் கடந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வை பரிபூரணமாக தரிசித்து பேரானந்தம் அடைந்ததே மிஃராஜ் ஆகும். நபி முஸா (அலை) அவர்கள் இறைவனை தரிசிப்பதற்காக துர்ஸினா மலைக்கு சென்ற போது ஒரு ஊசிமுனை அளவிற்கு இறைவன் காட்சி தந்ததையே தம் கண்களால் காணவியலாமல் மயங்கி விழுந்தார்கள்.

னால் நமது ஆருயிர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், முட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் எப்படி பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து உள்ளதோ இறைவனை நீ நான் என்று பிரிக்க முடியாத அளவிற்கு இடமற்ற ஏகாந்த வெட்ட வெளியில் தரிசித்து பேரானந்தம் அடைந்தார்கள். இறைவனை தரிசிக்கும் போது "என்னுடைய உடலாலான வணக்கங்களும், மனதால் ஆன வணக்கங்களும் இறைவா! உன்க்கே உரித்தாகட்டும்!" (அத்தஹியாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தையிபாத்து) என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூற, "நபியே! சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகட்டும்" (அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு) என இறைவன் வாழ்த்த, அந்த ஏகாந்த நிலையிலும் தங்களுடைய உம்மத்தனாகளின் நினைவு வர "எனக்கு மட்டுமா?" (அஸ்ஸலாமு அலைனா?) என பெருமானார் (ஸல்) அவர்கள் வினவ, அதற்கு இறைவன் "சாலிஹான அடிபணிந்தவர் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்" ( வ அலஇபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்) எனக் கூறினான். இந்த ஒப்பற்ற அரும் பெரும் இறை செய்தியை, மிகத் தூரங்களுக்கு அப்பால் கேட்டுக் கொண்டிருந்த மலக்குமார்கள் " அதற்கு நாங்கள் சாட்சி பகர்கிறோம்" (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்தஹ வ ரசூலஹஷ=) எனக் கூறினார்கள். இதைத்தான் நாம் 'அத்தஹிய்யாத் தில் ஓதிக் கொண்டிருக்கிறோம்.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கொணட விணணுலகப்பயணத்தின் மூலம் நமக்கு எண்ணற்ற படிப்பினைகள் போதிக்கப்பட்டுள்ளது.

 

தொழுகை ஒரு பரிச

னித வாழ்வு முறை, எண்ணற்ற விஷயங்களால் போதிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக புனித தொழுகையும் நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளன. அதுவும் இறைவன் நம்க்களித்த அய்ம்பது நேர தொழுகையினை, உம்மத்தினர்களின் நிலைமையுணர்ந்து, பலகீனம் தெரிந்து அய்ந்து நேர தொழுகையாக மாற்றி இறைவனிடம் சலுகை பெற்று தஙகள் உம்மத்தினர்களுக்கு பரிசாக கொடுத்தார்கள்.

தொழுகையை நிலை நிறுத்தும் போது, ஒளுவெடுப்பதிலிருந்து தொழுது முடிப்பது வரை அவசரமின்றி, நிதானத்துடன், சந்தோஷமாக செய்யும்போது எவ்வளவோ நன்மைகளும்; உடலுக்கும், மனதிற்கும் பயிற்சியாகவும் அமைகிறது. எனவேதான் சஙகைமிகு ஷைகுனா ஜமாலியா சையது கலீல் அவ்ன் மவ்லானா அவர்கள் கூறுகிறார்கள். - "தொழுகையினை சந்தோஷமாக நிலை நிறுத்துங்கள்.எப்படி நாம் குளிக்கும்போது நம்மிலருந்த அழுக்குகள் எல்லாம் அகற்றப்படுகின்றனவோ அது போல் தொழும்போது உடல. சுகமடைவதோடு மன அழுக்குகளும் நீங்குகின்றன."

 

ஸ்ஸலாத்து முஃமினில் மிஃராஜ்" என்ற புனித மொழிக்கேற்ப தம்முடைய தொழுகையிலும் இறை தரிசனத்தைப் பெற்று மிஃராஜின் இந்த சிறப்பிற்குரிய இரவில் நபிபிரான் (ஸல்) அவர்களின் திருப்பேரர் சங்கைமிகு ஜமாலியா சையது கலீல் அவ்ன் மவ்லானா அல. ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய புனித இரவிற்கான துஆவையும் ஓதி "அவ்வலுதீன் மஃரிபத்துல்லாஹ்" அதாவது மார்க்கத்தி ஆரம்பமே அல்லாஹ்வைப்பற்றி அறிவது என்ற புனித மொழிக்கேற்ப இறைவனை அறிந்து, இறை அறிவனைப் பெற்று நமது புனித தொழுகைகளையும் மிஃராஜ்களாக ஆக்குவோம். இப்புனித இரவின. பாக்கியஙகளைப் பெற்றுக் கொள்வோம்.

 

புனித இரவிற்கான துஆ!

ல்லாஹ்வே, மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை எம்பெருனாரை நீ நடத்தினாயே, அவர்கள் பொருட்டால் எம் அனைவருக்கும் தைரியத்தையும் உடல் சக்தியையும் மனோநிம்மதியையும் தந்தருள்வாயாக!

 

ல்லாஹ்வே, எம்பெருமானார் முதல் வானத்திற்கு சென்றபோது சிறப்பும் மேன்மை தங்கி நின்ற ஆதம் (அலை) அவர்களைக் கணடார்கள். அவர்கள் இருவா பொருட்டாலும் சிறப்பையும் மேன்மையையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

 

ல்லாஹ்வே, இரண்டாவத வானிலே ஈஸா (அலை) அவார்களை எம்பெருமானார் கணடார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் எமக்கு நிறைந்த ஈமானையும், பூரண தவ்ஹீது ஞானத்தையும் உண்மைக்கு முரணானவர்களுடன் எதிர்த்துப் பேசி எதரிகளை வெற்றி கொள்ளும் தன்மையையும் தந்தருள்வாயாக!

 

ல்லாஹ்வே, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்றாம் வானத்திலே யூசுஃப் (அலை) அவர்களைக் கணடார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் மாட்சிமையையும் உடல், அழகையும், உள் அழகையும், நிறைந்த செல்வத்தையும், நோயற்ற வாழ்வையும், பாபமற்ற நற்கிரியைகளையும் எமக்குத் தந்து நிறைந்த லாபத்தையும் உணவில் விஸ்தீரணத்தையும் தந்து எம் வாழ்வில் இன்பம் கொழிக்கச் செய்வாயாக!

 

ல்லாஹ்வே, அய்ந்தாம் வானத்திலே எம்பெருமானார் ஹாருன் (அலை) அவர்களைக் கணடார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் எம் குடும்பம், எம்மைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும், அனைத்துப் பொருட்களுக்கும் பாதுபாப்பை என்றென்றும் அருள்வாயாக. எம் அனைவருக்கும் வெற்றி மேல் வெற்றியைத் தந்தருள்வாயாக.

 

ல்லாஹ்வே, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆறாவது வானத்திலே மூஸா (அலை) அவர்களைக் கண்டார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் எம் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றியருள்வாயாக. துன்பம் துயர்களை நீக்கியருள்வாயாக. உன்னையறியும் பாக்கியத்தையும் எம் பெருமானார் ஷபாஅத்தையும் எமக்குத் தந்தருள்வாயாக. நாயகத்தின் எதிரிகளை செயல் இழக்கச் செய்வாயாக!

 

ல்லாஹ்வே, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஏழாவது வானத்திலே இப்ராஹிம் (அலை) அவர்களைக் கணடார்கள். இவர்கள் இருவர் பொருட்டாலும் கொடிய நம்ரூத்தின் நெருப்பிலிருந்து  இப்ராஹிம் (அலை) அவர்களைக் காப்பாற்றயது போன்று எம்மை கொடிய நோய்களிலிருந்தும், கொடிய சத்ருக்களிலிருந்தும் அவர்கள் உண்டு பண்ணும் கொடமைகளிலருந்தும் மனக் குழப்பங்களிலிருந்தும், அழிவிலிருந்தும் எம்மைக் காப்பாற்றி எமக்கு சந்தோஷ வாழ்வையும் நீடிய வாழ்வையும் தந்தருள்வாயாக!

 

ல்லாஹ்வே, எம. பெருமானார் அதற்கு மேலும் சென்று உன்னை அறிவுக் கண்ணால் பூரணமாய்க் கண்டு இரண்டறக் கலந்து இன்பம் பெற்றார்களே அந்த இன்பத்தை எல்லாவற்றிலும் உன்னைக் கண்டு லயிக்கும் இன்பத்தை எமக்கு தந்தருள்வாயாக!

 

ல்லாஹ்வே,  எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பொருட்டால் எமக்கு பேரின்பத்தை தந்தருள்வாயாக. இந்த ஊரையும், உலகையும் காப்பாற்றயருள்வாயாக. எம் பாபங்களை மன்னித்து எமக்கு பூரண வெற்றியைத் தந்தருள்வாயாக. உன் எதிரிகள் எஙகிரந்தாலும் தோற்றேடச் செய்வாயாக. கபடம் சூதற்ற உண்மையான வாழ்க்கையை எமக்கு தந்தருள்வாயாக. உன்னி கலந்து வாழும் வாழ்க்கையையே எம் வாழ்க்கையாக்குவாயாக!

உங்கள் நண்பருக்கு இந்தப் பக்கத்தை அனுப்ப....