முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

பெறற்கரிய பெற்றோர

உன் அழகைப் பார்த்து ஆசை கொள்ளலாம் பதவியைப் பார்த்து மரியாதை புரியலாம். பண்பைப் பார்த்து வியப்புறலாம். கற்றவனாக, கண்ணியத்திற்குரியவனாக இருக்கும் பொழுது உலகில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். விதவிதமான ஆகுமான உணவுகளை உண்டு மகிழலாம். நோய் வந்தால் மருந்துகளை உண்டு சரி செய்யலாம். ஆனால் இவைகளை உனக்காக இன்னொருவர் செய்திட முடியுமா என்று வினவினால்? திட்டவட்டமாக முடியாது என்றுதான் மறுப்பாய்!


இவையெல்லாம் இன்னொருவரால் முடிந்திருக்கிறது? நீ துளியாய் இருந்தபோது உனக்கான 'தங்குமிடத்தை' தன்னுள் வைத்திருந்தவள். உனக்காக உண்டவள். மருந்துகளை உட்கொணடவள். 'தாய்'.
உனக்காக உழைத்து இரத்தத்தை 'வியர்வை ஆக்கியவர். நீ உண்ணவும், உடுக்கவும், உயர்வடையவும் தன்னையே உருக்கிக் கொண்டவர் 'தந்தை'.


கம்பீரமான கட்டடத்தைக் கண்ணுறும் ஒருவர் அதன் கீழே அழுந்திக் கிடக்கும் அஸ்திவாரத்தை அறிவதில்லை! அதைப் போலத்தான் நமக்காக 'பெற்றோர்' பட்டப்பாட்டைப் பெரும்பாலோர் உணர்வதில்லை. உணர்த்துவதுமில்லை! தன்னலம் பாரா இருவரின் செயலுக்கும் நன்றிக்கடனாக, பிரதியுபகாரமாக எதை செய்தும் ஈடு செய்திடல் இயலாது. 'வல்லோன் அல்லாஹ்' அன்னை தந்தையரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றான்.


'(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளை யிட்டிருப்பதுடன்) 'தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி'யாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடந்துவிட்ட போதிலும், உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும், புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வும் பேசும். அவர்களிடம் மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக!


அன்று என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் பிரார்த்திப்பீராக! - அல்குர்ஆன் (17:23,24)


'தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்' அல்குர்ஆன் (29:18).
'உமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுதேசம் செய்;தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பம் அனுபவித்து (கர்பத்தில்)அவனைச் சுமந்தாள். அவன் பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே மனிதனே எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா.முடிவில் நீ என்னிடம் வந்து சேர வேண்டியிருக்கிறது'(அல்-குர்ஆன் 31:14)

அவ்விருவரிடையே உரையாடும் போது ஒரு அடிமை தனது எஜமானரிடம் உரையாடுவது போன்றுஉரையாட வேண்டும், கட்டுப்பட வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும் ஒரு விஷயத்தை தவிர, 'எனினும் இறைவன் என்று நீ அறியாததை, எனக்கு நீ இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால்(அவ் விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம்.ஆயினும் இவ்வுலகத்தில்(நன்மையான காரியங்களிள்)நீ அவ்விருவருடனும் ஒத்து வாழ். (அல்குர்ஆன் 31:19)

இறைவன் கூறியதைப் படித்தோம். செயல் படுத்துவோம். இனி இறைத்தூதர் போதித்த சிலவற்றைப் படித்து பயன் பெறுவோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் 'இறைத்தூதரே நான் அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதியானவர் யார்?' என்று கேட்டார்;.

நபி(ஸல்) அவர்கள் 'உமது தாய்' என்றார்கள்.
'பிறகு யார்?'
'உமது தந்தை' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(ஸஹிஹூல் புஹாரி)


அபுபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா?' என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். தாங்கள் அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினோம்.

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோர்க்கு நோவினை செய்தல்' என்று கூறினார்கள். 'இணைவைத்த பெற்றோருக்குக் கூட உபகாரம் செய்ய ஏவினார்கள்.' பெற்றோருக்கு மன நோவினை செய்தவனுக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோரை துன்புறுத்தியவர்கள் என் முகத்தைக்கூட மறுமையில் பார்க்க முடியாது' என்றும் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் நான்கு விஷயங்கள்' என்றார்கள்.

1. அவர்களுக்காக துஆச் செய்வது, அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவது.
2. அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது.
3. அவர்களது நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது.
4. இரத்த பந்துக்களுடன் இணைந்திருப்பது.
இரத்தபந்தம் என்ற உறவு முறை அவ்விருவரின் மூலமே தவிர ஏற்பட முடியாது என்று கூறினார்கள் (அல் அதபுல் முஃப்ரத்)

நிச்சயமாக 'உபகாரத்தில் எல்லாம் மிகப் பெரிய உபகாரம் தமது தந்தை நேசித்தவரை தந்தை மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது' (ஸஹீஹ் முஸ்லிம்)