முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

ஓய்வும் எடுங்கள்

சும்மா இருப்பது அரிது என்று சொன்னார்கள். மனிதன் எதையாவது செய்து கொண்டே இருக்க விரும்புகிறான். செய்வதற்கு ஒன்றுமில்லாத போது எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஆமாம், "எதையாவது" சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ' சோம்பேறியின் மூளை சாத்தானின் உலைக்கூடம்' என்றார்கள். அதாவது வேலையில்லாத போது, தேவையற்ற - பயனற்ற விஷயங்களைப் பற்றியே நாம் சிந்திக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், வேலை இல்லாதபோது எதிர்மறை விஷயங்களைப் பற்றியே நாம் அதிகமாக சிந்தக்கிறோம்.

இது ஆரோக்கிய மன நிலைக்குப் பெரிய எதிரியாக விடுகிறது.

ஒவ்வொரு நாளும் நேரத்தின் ஒரு பகுதியை, எந்தவிதமான சிந்தனையுமின்றி அமைதியாக இருப்பதற்கு ஒதுக்குங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களைப் பற்றி சிந்திக்காதீர்கள். கடந்தகால பாதிப்புகள் பற்றியும், எதிர்காலப் பிரச்சனைகள் பற்றியும் தோன்றுகின்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். இதெல்லாம் சாத்தியம்தானா என்று உஙகளுக்குத் தோன்றும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அமைதி நிலை என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடக் கூடியதல்ல.

ஆனாலும், சிறிது நேரத்தை இந்தப் பயிற்சிக்கு ஒதுக்குகின்றபோது, தேவையற்ற  எண்ணஙகளின் ஆக்கிரமிப்பு குறைய ஆரம்பிக்கும். நாளடைவில் சில நிமிடங்கள் அமைதியாக இருப்பது பழக்கமாகிவிடும். போகப் போக இந்த நேரத்தை நீஙகள் அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்த அமைதி நேரம் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமையும். இந்த அமைதி நேரத்தில் உஙகளுடைய ஆதிம பலம் அதிகரிப்பதை உணர்வீர்கள். ஓர் அபூர்வமான ச்கதி உங்கள் உடலுக்குள் பிரவிகிக்கத் தொடங்கும். இந்த அமைதிக்குப் பிறகு உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். உங்களைச் சுற்றிலும் ஒரு மகிழ்ச்சிச் சூழ்நிலை வியாபித்திருப்பதை அனுபவிப்பீர்கள். வாழ்க்கை இலேசாகிவிடும். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்ற மனோபாவம் தோன்றிவிடும்.

தினமும் சில நிமிடங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். எல்லாமே ஒளிமயமாகிவிட்ட உணர்வு தோன்றும்.